நாட்டின் குறைந்து வரும் வெளிநாட்டு கையிருப்பை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநரும் அதற்கான திட்டங்களை வகுத்துள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல தெரிவித்தார்.

இதேவேளை ஆண்டின் இறுதிக்குள் மத்திய வங்கியினால் 3 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் வெளிநாட்டு கையிருப்புகளை திரட்ட முடியும் என ஆளுநர் கப்ரால் தெரிவித்துள்ளார்.