பொதுவாக முடி உதிர்வு பிரச்சினை என்பது பலருக்கும் நடக்ககூடிய ஒன்று. முடியை சரியான பராமரிப்பு இல்லையென்றாலும் முடி உதிர்வுக்கு முக்கியகாரணமாக அமைந்துவிடும்.

அதிலும் குளிர்காலத்தில் முடி உதிர்வு பிரச்சினை அதிகமாக இருக்கும். அதை எப்படி தடுக்கலாம் என்பதை பற்றி பார்ப்போம்.

ஈர தலையுடம் சீவுதல்

பெரும்பாலும் மக்கள் ஷாம்பு செய்த பிறகு ஈரமான முடியை சீவுகின்றனர். இப்படி செய்வதால் முடி எளிதில் அவிழ்ந்துவிடும் என்று நினைக்கிறார்கள். ஆனால் ஈரமான முடியை சீப்பினால் முடி உதிர்வு ஏற்படும்.

ஏனெனில், ஈரமான முடியின் வேர் தளர்வாக இருக்கும். எனவே, முடி உலர்ந்த பிறகே சீவுங்கள். முடி ஈரமாக இருக்கும்போதே முடியைக் கட்டுகிறார்கள், அதிலும் குறிப்பாக வீட்டில் இருக்கும்போது, வேலை செய்யும்போது தொந்தரவாக இருக்கும் என்பதால், பெண்கள் முடி ஈரமாக இருக்கும்போது, தலையில் ரப்பர் பேண்ட் அல்லது கிளிப் போட்டுவிடுகிறார்கள்.

அதனால், முடியின் வேர்களில் ஏற்படும் அழுத்தமானது, முடியை பலவீனப்படுத்துகிறது. தலைமுடியைக் கழுவிய பின் ஹேர் டிரையரை பயன்படுத்துவது தலைக்கு குளித்த பிறகு, உடனே முடியை காய வைப்பதற்காக ஈரமான கூந்தலில் ஹேர் டிரையர் போன்ற கருவிகளைப் பயன்படுத்துவதும் முடியை பலவீனப்படுத்தும்.

இப்படி செய்வதால் முடி வறண்டு, உயிரற்றதாகிவிடும். சிலர் இரவில் தலைக்கு குளித்துவிட்டு, ஈரம் காய்வதற்கு முன்னர் தூங்கிவிடுவார்கள். ஆனால் இப்படி செய்வதால் முடி உடைந்து போவதோடு, சளி ஏற்படும் அபாயமும் உள்ளது.

இரவுக்கு பதிலாக மாலையில் தலைமுடியைக் கழுவினால், தூங்குவதற்கு முன்னதாக முடி காய்ந்துவிடும். குளிர்காலத்தில் கிடைக்கக்கூடிய பல பழங்களைக் கொண்டு ஹேர் மாஸ்க்குகள் போட்டால், முடிக்கு தேவையான ஊட்டச்சத்துக் கிடைக்கும்.