குளிர்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக வைத்திருப்பது. இதனால் பருவகால நோய்களை எதிர்த்து போராடலாம். அதிலும், இந்த குளிர்காலத்தில் சாப்பிடுவதற்கும், குடிப்பதற்கும் பல விஷயங்கள் கிடைத்தாலும், உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க என்ன சாப்பிட வேண்டும் என்பது தான் மிகப்பெரிய கேள்சியாக இருக்கிறது.

அந்த வகையில் குளிர்காலத்தில் முள்ளங்கியை உட்கொள்வது மிகவும் நன்மை பயக்கும் என்று சுகாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். பலர் இதை சமைத்து சாப்பிட விரும்புகிறார்கள், பலர் இதனை சாலட்டாக சாப்பிட விரும்புகிறார்கள்.

குளிர்காலத்தில் முள்ளங்கி உட்கொள்வதன் அற்புதமான நன்மைகள் மற்றும் எந்த நோய்களில் இருந்து அவை நம்மைப் பாதுகாக்கும் என்பதை பற்றித் தெரிந்து கொள்வோம்.

முள்ளங்கியை உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது. இதில் ஏராளமான வைட்டமின்-சி இருப்பதால் காய்ச்சல் மற்றும் ஜலதோஷத்தைத் தவிர்க்க உதவுகிறது. நீங்கள் இதை தினமும் உட்கொண்டால், நீங்கள் நோய்களிலிருந்து பாதுகாப்பாக இருப்பீர்கள். கல்லீரல் கிருமித்தொற்றால் பாதிப்படையும் போது மஞ்சள் காமாலை நோய் ஏற்படுகிறது.

இந்த மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் முள்ளங்கி ஜூசை உப்பு சேர்க்காமல் குடித்து வந்தால் இந்நோயின் தீவிரம் குறையும். மேலும் முள்ளங்கி இதய நோய்களைக் குறைப்பதோடு தொடர்புடையது என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.

எளிய முள்ளங்கி இதயத்திற்கு ஆரோக்கியமான புதிய காய்கறியாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். நீர் அதிகம் அருந்தாமை, உடலுழைப்பு இல்லாத வாழ்க்கை முறை போன்ற காரணங்களால் இன்று பலரும் மலச்சிக்கல் பிரச்சனையால் அவதியுறுகின்றனர்.

தினந்தோறும் முள்ளங்கியை கூட்டு, பொரியல் போன்ற பதார்த்தங்களாக செய்து சாப்பிட்டு வருபவர்களுக்கு செரிமான கோளாறுகள் நீங்கும். முள்ளங்கி நார்ச்சத்துகளால் நிரம்பியுள்ளன, எனவே அவை உங்கள் செரிமான அமைப்பை சீராக வைத்திருக்க உதவும்.

முள்ளங்கி இரத்தத்தில் சர்க்கரை உறிஞ்சப்படுவதைக் கட்டுப்படுத்த உதவுகிறது. எனவே, நீரிழிவு நோயாளிகள் இதை உட்கொள்ளலாம். இது அவர்களுக்கு நன்மை பயக்கும். தண்ணீர் அதிகம் அருந்தாமை, உப்பு தன்மை அதிகமாக இருக்கும் நீரை குடிப்பது போன்ற காரணங்களால் இன்று பலருக்கும் சிறுநீரகத்தில் கற்கள் உருவாகிறது.

முள்ளங்கி ஜூஸ் தினந்தோறும் இரண்டு வேளை அருந்தி வந்தால் சிறுநீரக கற்கள் கரைந்து, சிறுநீரகங்களின் நலம் காக்கப்படும். உடல் பருமன் ஏற்படுவதற்கு அதிகம் காரணமாக இருக்கிறது. உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தினமும் காலையில் முள்ளங்கி ஜூஸ் அருந்தி வந்தால் விரைவாக உடல் எடையை குறைக்க முடியும்.