கூட்டு ஒப்பந்தம் அவசியம் இல்லை என்ற நிலைப்பாட்டிலேயே தாம் தொடர்ந்தும் உள்ளதாகத் தமிழ் முற்போக்கு கூட்டணியின் இணைத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

ஹட்டனில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பெருந்தோட்டங்களை தொழிலாளர்களுக்குப் பகிர்ந்தளித்து அவர்களைச் சிறு தோட்ட உரிமையாளர்களாக்க வேண்டும் என்பதே தமது நோக்கமாக இருப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் திகாம்பரம் தெரிவித்துள்ளார்.