வாழைத்தோட்டம் – பழைய யோன் வீதி பிரதேசத்தில் வைத்து பாதாளக் குழு உறுப்பினரான ‘கெசெல்வத்த ஃபவாஸ்’ கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

மகிழுந்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்களால் இக் கொலை செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.