கேரள கஞ்சாவுடன் சிவனொளிபாதமலைக்கு சென்ற சந்தேகநபர்கள் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றைய தினம் ஹட்டன் கோட்ட குற்றப்புலனாய்வு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட மோப்பநாயுடன் கூடிய விசேட சோதனை நடவடிக்கைகளின் போதே இவர்களை கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர்களிடம் இருந்து 1500 மில்லிகிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த சந்தேகநபர்கள் இன்று நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.