மட்டக்களப்பு – செங்கலடி பிரதேச செயலகத்தின் அதிகாரி ஒருவர் கையூட்டல் பெற்றமையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

காணி உறுதிப்பத்திரம் தயாரிப்பதற்கான உத்தியோகபூர்வ கடமைகளை மேற்கொள்வதற்கு 100,000 ரூபா கையூட்டல் பெற்ற நிலையில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவரிடம் கையூட்டல் பெற்றபோது குறித்த சந்தேகநபர் கைதானதாக கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.