பிச்சையெடுத்த பெண்ணின் குழந்தைக்கு ஒருவர் செய்த உதவி அனைவரது பாராட்டையும் பெற்று வருகின்றது.

ஏழை பெண்  ஒருவர் தன் மடியில் குழந்தையை வைத்துக்கொண்டு  பிச்சையெடுத்துள்ளார்.

ஒரு டீக்கடையில் போய் கைக்குழந்தையோடு காசு கேட்டு நின்ற போது அந்த கடை ஓனரைப் பார்த்து குழந்தை சிரிக்கின்றது.

உடனே பிச்சை போடுபவரின் மன நிலையில் இருந்து அகன்று, ஏதோ அந்தக் குழந்தையின் உறவினர் போலவே அவரும் விளையாடுகின்றார். பின்னர் கடையில் இருந்து ஒரு பிஸ்கட்டை பாக்கெட்டோடு எடுத்து வந்து கொடுக்க மகிழ்ச்சியில் சிரிக்கின்றது.

இதனை அருகில் உள்ளவர்கள் வீடியோ எடுத்து வைரலாக்கியுள்ளனர்.