கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 179 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 561,128 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை நாட்டில் கொரோனா தொற்றினால் 587,935 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களில் 15,019 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது