இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 748 பேர் நேற்று (செவ்வாய்க்கிழமை) அடையாளம் காணப்பட்டனர்.
இதன்படி கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 67 ஆயிரத்து 697 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் நேற்று கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 21 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு உயிரிழந்துள்ளவர்களில் 11 ஆண்களும் 10 பெண்களும் உள்ளடங்குகின்றனர்.
இந்நிலையில் வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 14 ஆயிரத்து 505 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 423 பேர் குணமடைந்து நேற்று வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.
இதனையடுத்து, நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 43 ஆயிரத்து 111ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது