கொழும்பு காலி முகத்திடலுக்கு அருகில் நேற்று (29) சொகுசு மகிழுந்தொன்று தீக்கிரையாகியுள்ளது.

நேற்றிரவு 10.20 அளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தினால் குறித்த மகிழுந்து முழுவதுமாக தீக்கிரையாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

தீயணைப்பு படையினரால் குறித்த தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதுடன், அதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.