நடைபெற்று வரும் LPL T20 2021 க்கான போட்டித் தொடரில், நேற்றைய போட்டியில் கொழும்பு ஸ்டார்ஸ் அணி 41 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

முதலில் துடுப்பெடுத்தாடிய கொழும்பு ஸ்டார்ஸ் அணி 18 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 167 ஓட்டங்களைப் பெற்றது.

கொழும்பு ஸ்டார்ஸ் அணி அஞ்சலோ மெத்தியூஸ் 73 ஓட்டங்களை பெற்றார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய காலி அணி 16.5 ஓவர்கள் நிறைவில் 121 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

காலி அணியில் அதிகபட்சமாக குசல் மென்டிஸ் 64 ஓட்டங்களையும், நவீன் உல் ஹக் 27 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும் பெற்றனர்.