லங்கா பிரிமியர் லீக் தொடரில் நேற்று  இடம்பெற்ற போட்டியில் காலி கிளாடியேட்டர்ஸ் அணியை வீழ்த்தி கொழும்பு ஸ்டார்ஸ் அணி வெற்றிப் பெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற காலி கிளாடியேட்டர்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய காலி கிளாடியேட்டர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட் இழப்பிற்கு 116 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

அவ்வணி சார்பில் பென் டங்க் அதிகபட்சமாக 38 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

இதற்கமைய, பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கொழும்பு ஸ்டார்ஸ் அணி 17.3 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இழக்கை அடைந்தது.

இரண்டு விக்கெட்டுக்களையும் துடுப்பாட்டத்தில் 24 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்ட தனஞ்சய டி சில்வா போட்டியின் ஆட்ட நாயகனாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.