லங்கா பிரிமியர் லீக் போட்டித் தொடரில் இன்று இடம்பெற்ற போட்டியில் கொழும்பு அணியை 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தம்புள்ள அணி வெற்றி பெற்றுள்ளது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தம்புள்ள ஜயன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 06 விக்கெட்டுக்களை இழந்து 196 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

கண்டி அணி சார்ப்பில் பிலிப் சேல்ட் 62 ஓட்டங்களையும், நஜிபுல்லா சட்ரான் 54 ஓட்டங்களையும் மற்றும் அணித்தலைவர் தசுன் சானக 38 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொண்டனர்.

பந்துவீச்சில் துஷ்மந்த சமீர அதிகபட்சமாக 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடுவதற்காக களமிறங்கிய கொழும்பு ஸ்டார்ஸ் அணி 18.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 177 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

இதற்கமைய, தம்புள்ள ஜயன்ஸ் அணி மூன்று போட்டிகளில் இரண்டு போட்டிகளில் வெற்றிப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.