கொவிட் தடுப்பூசியின் 2 டோஸ்களையும் பெற்றுக்கொண்ட ஒருவருக்கு கொவிட் வைரஸ் தொற்று ஏற்பட்டால் அவர் 6 மாதங்களின் பின்னர் பூஸ்டர் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று தொற்று நோயியல் பிரிவு பரிந்துரைக்க தீர்மாணித்துள்ளது.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அதன் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சமித கினிகே இதனை தெரிவித்துள்ளார்.