கோதுமை மாவு கருப்பட்டி தோசை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

  1. கோதுமை மாவு – ஒரு கப்
  2. அரிசி மாவு – கால் கப்
  3. கருப்பட்டி – அரை கப்
  4. தேங்காய்த் துருவல் – ஒரு டேபிள் ஸ்பூன்
  5. ஏலக்காய்த்தூள் – அரை டீஸ்பூன்
  6. நெய் – தேவையான அளவு
  7. உப்பு – ஒரு சிட்டிகை

செய்முறை

ஒரு பாத்திரத்தில் கருப்பட்டி மூழ்கும் வரை தண்ணீர் சேர்த்து சூடாக்கி ஒரு கொதிவிட்டு இறக்கவும்.

கல், மண் போக வடிகட்டி ஆறவிடவும்.

அகலமான பாத்திரத்தில் கோதுமை மாவு, அரிசி மாவு, கருப்பட்டி கரைசல், தேங்காய்த்துருவல், ஏலக்காய்த்தூள், உப்பு சேர்த்து தோசை மாவு பதத்துக்கு கரைக்கவும்.

தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை ஊற்றி, இருபுறம் நெய் விட்டு வேகவைத்து எடுத்துப் பரிமாறவும். சூப்பரான சத்தான கோதுமை மாவு கருப்பட்டி தோசை ரெடி.