பண்டாரகம, வெல்மில்ல பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்து இன்று (02) அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

மோட்டார் சைக்கிள் அதிவேகமாக சென்றதன் காரணமாக வீதியில் உள்ள பாதுகாப்பு வேலியில் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

பண்டாரகம, வல்கம பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞன் மற்றும் கண்டியைச் சேர்ந்த 19 வயதுடைய யுவதி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.