அரசாங்கத்தின் கீழ் இயங்கும் சதொச பல்பொருள் அங்காடிகளில் மாற்றப்படும் புதிய பெயர் பலகைகளில் தமிழ்மொழி புறக்கணிக்கப்படுவது கண்டிக்க தக்க விடயமென இ.தொ.காவின் உப தலைவர்  செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

தமிழ் மொழி புறக்கணிப்பு தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,  , அண்மைக்காலமாக சதொச பல்பொருள் அங்காடிகளில் மாற்றியமைக்கப்படும் புதிய பெயர் பலகைகளில் தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டு வருகிறது.

இந்த நாட்டின் அரச கரும மொழிகளாக சிங்களம்  மற்றும் தமிழ் மொழிகள் உள்ளன. சிங்களம் மற்றும்  தமிழ் மக்கள்  பயன்படுத்தும் அங்காடியாக சதொச உள்ளது. ஆகவே, தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் தமிழ் மொழி புறக்கணிக்கப்படுவதற்கான காரணம் என்ன?

இந்த விடயம் குறித்து  சம்பந்தப்பட்ட அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளதுடன், தேசிய மொழிகள் ஆணைக்குழுவின் கவனத்திற்கும் கொண்டு வந்துள்ளேன் . உடனடியாக இது தொடர்பில் அவதானம் செலுத்த  வேண்டுமெனவும் வலிறுத்தியுள்ளேன். இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்  என்று நம்புகிறேன்” என்றும்  அவர் கூறியுள்ளார்.