சமையல் எரிவாயுவை சந்தைக்கு விநியோகிப்பதற்கு முன்னர் மேலதிக பரிசோதனை சிலவற்றை மேற்கொள்வதனால், அதனை விநியோகிக்கும் நடவடிக்கையில் சிறிது தாமதம் ஏற்படக்கூடுமென்று ´லிற்றோ காஸ் நிறுவனம்´ அறிவித்திருக்கிறது.

சமையல் எரிவாயுவின் தரம் தொடர்பில் முன்னர் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளுக்கு மேலதிகமாக புதிதாக இன்னும் சில பரிசோதனைகள் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றன.

சமையல் எரிவாயு கொள்வனவு செய்வதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்ததாக எமது ஊடக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.