ஏப்ரல்-21 சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் சஹ்ரானுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணிய குற்றச்சாட்டின் கீழ், நபரொருவர் கண்டியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கண்டி – ஹிங்குல பகுதியைச் சேர்ந்த 25 வயதான இளைஞரே கைது செய்யப்பட்டுள்ளார்.

கண்டி பயங்கரவாதத் தடுப்பு பிரிவு அதிகாரிகளினால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹம்பாந்தோட்டை பகுதியில் நடத்திச் செல்லப்பட்ட செயலமர்வுகளில் கலந்துகொண்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதானதாகத் தெரிவிக்கப்படுகிறது.