யாழ்ப்பாணம் சாட்டி மாவீரர் துயிலும் இல்லப் பகுதியில் இராணுவத்தினருக்கும் மக்களுக்கும் இடையில் குழப்ப நிலை ஏற்பட்டது.

மாவீரர் நினைவேந்தலுக்காக சுடரேற்றச் சென்றிருக்கின்ற மக்களை உள்ளே செல்லவிடாது இராணுவத்தினர் தடுத்தனர். இதனால் அங்கு குழப்ப நிலை ஏற்பட்டது.
மக்களுடன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முக்கியஸ்தர் சட்டத்தரணி சுகாஸூம் சென்றுள்ளார்.