சாவகச்சேரி நகர சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் ஏகமனதாக இன்று (வியாழக்கிழமை) நிறைவேறியது.

எதிர்வரும் ஆண்டுக்கான வரவு- செலவுத்திட்ட கூட்டம், தவிசாளர் திருமதி சிவமங்கை இராமநாதன் தலைமையில் இன்று காலை கூடியது.

18 உறுப்பினர்களைக் கொண்ட சாவகச்சேரி நகரசபையில்,  ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த மூன்று உறுப்பினர்கள் தவிர்ந்த அனைவரும் சபைக்கு பிரசன்னமாகியிருந்தனர்.

இதன்போது தவிசாளரால் வரவு- செலவுத்திட்டம் சபையில் முன்வைக்கப்பட்டு விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது சபையில் பிரசன்னமாகி இருந்த அனைத்து உறுப்பினர்களின் ஏகமனதான ஆதரவோடு, அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.