பாகிஸ்தான் – சியல்கோட் பகுதியில் இலங்கையர் ஒருவர் சித்திரவதைக்கு உட்படுத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஜனாதிபதியும் பிரதமரும் கண்டனம் வெளியிட்டுள்ளனர்.

இந்த விடயம் தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள ஜனாதிபதி, பாகிஸ்தானின் சியால்கோட்டில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக தாம் மிகுந்த கவலையடைவதாக தெரிவித்துள்ளார்.

பிரதமர் இம்ரான் கானும், அந்நாட்டு அரசாங்கமும் நீதி வழங்கப்படுவதையும் எஞ்சியுள்ள இலங்கைத் தொழிலாளர்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் என நமப்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், சம்பந்தப்பட்ட அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்துவதற்கான தனது உறுதிப்பாட்டைக் கடைப்பிடிப்பார் என நம்புவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த தீவிரவாத கும்பல் நடத்திய காட்டுமிராண்டித் தனமான மற்றும் கொடூரமான தாக்குதலைக் கண்டு இலங்கை அதிர்ச்சியடைகிறது என்றும் பதிவிட்டுள்ளார்