கண்டி- வத்தேகம, மீகம்மன பகுதியிலுள்ள சிறுவர் புனர்வாழ்வு இல்லத்தில் இருந்து தப்பிச் சென்ற 5 சிறுமிகளை தேடி, பொலிஸார் விசாரணைகளை  ஆரம்பித்துள்ளனர்.

நேற்று (செவ்வாய்க்கிழமை) நண்பகல், சிறுவர் இல்லத்திற்கு அருகிலுள்ள பாடசாலைக்கு அழைத்துச் சென்றிருந்த வேளையில் இந்த சிறுமிகள் (16 முதல் 18 வயது) தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த சிறுமிகளில் ஒருவர், நாவலப்பிட்டியிலுள்ள அவரது வீட்டில் தங்கியுள்ளதாக தகவல் கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

புஸ்ஸல்லாவ, வத்தேகம மற்றும் உடிஸ்பத்துவ ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.