சிவனொளிபாதமலை யாத்திரைக்காக கேரள கஞ்சா போதைப்பொருளுடன் சென்ற 9 பேர் ஹட்டன் கோட்ட குற்றப்புலனாய்வு பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த குற்றத்தடுப்பு பிரிவினர் நேற்று (24) ஹட்டன் மோப்பநாய் பிரிவுடன் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 1,500 மில்லிகிராம் கேரளா கஞ்சா போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளன.

சந்தேகநபர்கள் கொழும்பு, கண்டி, கலேவல உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளை சேர்ந்தவர்கள் என்றும் இவர்களை இன்று நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.