கொரோனா வைரஸ் முதன் முதலாக கண்டறியப்பட்ட சீனாவில், தற்போது ஒமைக்ரான் தொற்று பரவல் கண்டறியப்பட்டுள்ளது. திங்கள் கிழமை சீனாவின் தியான்ஜின் நகரில் வெளிநாட்டில் இருந்து திரும்பிய ஒருவருக்கு  ஒமைக்ரான் தொற்று பரவல் கண்டறியப்பட்டது.

இந்த நிலையில், மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நவம்பர் 27 ஆம் தேதி வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய 67 வயது முதியவர் ஒருவர், இரு வார தனிமைப்படுத்தலுக்கு பின், வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டது.