இலங்கையின் பொறுப்புக்கூறல் பொறிமுறைக்கான ஐக்கிய நாடுகளின் நிதி ஒதுக்கத்தில் குறைப்பைச் செய்வதற்கு, சீனாவும் ரஷ்யாவும் முயற்சித்து வருவதாக, மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் 2022 ஆம் ஆண்டிற்கான பாதீடு தொடர்பான விவாதம் நடைபெற்று வருகின்றது.

ஒவ்வொரு டிசம்பர் மாதமும், ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் நிதி அமைப்பான ஐந்தாவது குழுவில், ஐக்கிய நாடுகளின் பாதீடு தொடர்பான இணக்கப்பாடு குறித்து விவாதிக்கப்படும்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறுவப்பட்ட பல முக்கியமான விசாரணைப் பொறிமுறைகள் இந்த நிகழ்ச்சித்திட்டத்தில் உள்ளன.

இலங்கை உள்ளிட்ட சில நாடுகளின் விவகாரங்கள் இதில் உள்ளடங்குகின்றன.

இந்நிலையில், அறிக்கை ஒன்றின் மூலம் மனித உரிமைகள் கண்காணிப்பகம் குறித்த விடயத்தை வெளிப்படுத்தியுள்ளது.