சேதன உரம் நிராகரிக்கப்பட்டமைக்கு நட்டஈடாக 8 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நட்டஈடு வழங்கப்பட வேண்டுமென கோரி சீன நிறுவனம், சிங்கப்பூர் தீர்ப்பாயத்தில் இலங்கைக்கு எதிராக வழக்குத் தொடர்ந்துள்ளது.

சீனாவின் Quingdao Seawin Biotech நிறுவனம் இவ்வாறு இலங்கைக்கு எதிராக சிங்கப்பூரில் முறைப்பாடு செய்துள்ளது. இலங்கையின் Colombo Commercial Fertilizers Ltd நிறுவனத்திடம் சீன நிறுவனம் நட்டஈடு கோரியுள்ளது.

மூவர் அடங்கிய நடுவர் குழாம் ஒன்றின் மூலம் இந்த முறைப்பாடு விசாரணை செய்யப்பட வேண்டுமெனவும் இரண்டு தரப்பிலிருந்தும் தலா ஒருவரை நியமிக்க முடியும் எனவும் சீன நிறுவனம் கோரியுள்ளது.

உற்பத்தி, போக்குவரத்து உள்ளிட்ட செலவுகளை ஈடு செய்யும் வகையில் இலங்கை, தமக்கு நட்டஈடு வழங்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.