ஒமிக்ரோன் பரவல் காரணமாக சென்னையில் உள்ள கடற்கரைகளுக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் மறு அறிவிப்பு வரும் வரை பொதுமக்கள் செல்வதற்கு தடை விதித்து மாநகராட்சி அறிவித்துள்ளது.

நடைபயிற்சி செல்வோர் நடைபயிற்சி பாதையில் மட்டும் செல்வதற்கு அனுமதி உண்டு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மணல்பரப்பில் செல்வதற்கு அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், பிரத்யேக நடைபாதையில் மாற்றுத்திறனாளிகள் செல்வதற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது

தமிழகத்தில் ஒமிக்ரோன் தொற்று பரவி வருவதை தொடர்ந்து புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது.

பள்ளிகளில் 8-ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் நடத்துவதற்கும் திருமணம் உள்ளிட்ட சமுதாய நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்கும் ஜனவரி 10ம் திகதி வரை கட்டுப்பாடுகள் விதித்தது.

இந்நிலையில் தற்போது ஒமைக்ரான் பரவல் காரணமாக சென்னையில் உள்ள கடற்கரைகளுக்கு நாளை முதல் மறு அறிவிப்பு வரும் வரை பொதுமக்கள் செல்வதற்கு தடை விதித்து மாநகராட்சி அறிவித்துள்ளது.