இந்தியாவில் நாகாலாந்து மாநிலத்தில், தமது சொந்த நாட்டு மக்களையே பயங்கரவாதிகளாகக் கருதி அவர்களை இராணுவத்தினர் சுட்டுக்கொன்ற சம்பவம் பதிவாகியுள்ளது.

தவறான தகவல் காரணமாக இச்சம்பவம் பதிவாகியுள்ளது. இதேவேளை துப்பாக்கிச் சூட்டில் 13 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

சிறப்புப் புலனாய்வுக் குழுவின் கீழ், இந்தச் சம்பவத்தை உயர்மட்ட விசாரணைக்களுக்கு நாகாலாந்து முதல்வர் நெய்பியு ரியோ உத்தரவிட்டுள்ளார்.

இந்த சம்பவத்தில் படுகாயமடைந்தவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும், இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனவும் கூறப்படுகிறது.