காணாமல் போனோர் தொடர்பான முன்னைய ஆணைக்குழுக்கள் மற்றும் குழுக்கள் ஆகியவற்றின் கண்டுபிடிப்புக்களை மதிப்பீடு செய்தல் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் எடுப்பதற்கான ஜனாதிபதி ஆணைக்குழு இன்று (திங்கட்கிழமை) கிளிநொச்சி விஜயம் மேற்கொண்டிருந்தது.

இந்த விஜயத்தின் போது ஆணைக்குழு காணாமல் போனோரின் குடும்பங்களை சந்தித்து விசாரணைகளை மேற்கொண்டிருந்தது.

குறித்த குழுவின் தலைவர் நீதியரசர் ஏ எச் எம்டி நவாஸ் தலைமையில் முன்னால் பொலிஸ்மா அதிபர் சந்ரா பெர்னான்டோ, முன்னாள் அரச அதிபர் நிமல் அபேசிங்க, லோகேஸ்வரி பத்மராஜா ஆகி உள்ளடக்கிய ஆணைக்குழு உறுப்பினர்கள் இதன்போது பிரசன்னமாகியிருந்தனர்.

இன்றைய தினம் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார் ஆகிய மாவட்டங்களிலிருந்து காணாமல் போனவர்களின் உறவுகள் குறித்த ஆணைக்குழுவினரை சந்தித்து காணாமல் போனோர் தொடர்பான முறைப்பாடுகளை பதிவு செய்தனர்.

குறித்த முறைப்பாடுகளை ஆணைக்குழுவினர் மக்களின் முறைப்பாடுகள் தொடர்பில் தமிழில் கேட்டறிந்து பதிவு செய்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.