ஜேர்மனி நாட்டின் பிரதமராக ஒலாப் ஸோல்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனால் அங்கு கடந்த 16 ஆண்டு காலம் பதவி வகித்த ஏஞ்சலா மெர்க்கலின் ஆட்சி நேற்றுடன் முடிவுக்கு வந்தது.

கடந்த செப்டம்பர் மாதம் அங்கு பொதுத்தேர்தல் நடந்து முடிந்தது. இதில் ஏஞ்சலா மெர்க்கலின் கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் கட்சி பெரும் பின்னடைவை சந்தித்தது. இடதுசாரி கட்சியான சமூக ஜனநாயக கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றது.

ஜேர்மனியின் புதிய பிரதமரை தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பு நேற்று அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் நடந்தது. முன்னாள் துணை பிரதமருமான ஒலாப் ஸோல்ஸ் புதிய பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டு உடனடியாகப் பதவியேற்றார்.