ஜே.வி.பி.யுடன் கூட்டணியில் இணைந்து செயற்பட முடியும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்திருப்பது தனிப்பட்ட கருத்து என்றும் கட்சியின் கருத்து அல்ல என அக்கட்சியின் சிரேஷ்ட உப தலைவருமான அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். 

கட்டுவன பிரதேசத்தில் நேற்று (26) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்