ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதற்கமைய மக்கள் விடுதலை முன்னணியை (ஜே.வி.பி.) போன்ற தூய்மையான கட்சியுடன் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இணைந்து பயணிப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகமுள்ளதாக அக்கட்சியின் பொது செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

2001 ஆம் ஆண்டு சந்திரிகா குமாரதுங்க ஆட்சி காலத்திலும், 2005 மஹிந்த ராஜபக்ஷ ஆட்சி காலத்திலும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, மக்கள் விடுதலை முன்னணியுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து ஏற்படுத்திக் கொண்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில் ஆட்சியை அமைத்தது. 

எனவே சு.க. – ஜே.வி.பி. இணைவு புதியதொரு விடயமல்ல என்பதையும் தயாசிறி ஜயசேகர சுட்டிக்காட்டினார்.

பத்திக், கைத்தறி துணிகள் மற்றும் உள்நாட்டு ஆடை உற்பத்தி இராஜாங்க அமைச்சில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைக் கூறினார்.