தஞ்சையார் என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப் படும் தஞ்சை அ.இராமமூர்த்தி தன்னுடைய 88 வயதில் காலமாகியிருக்கிறார். 

மிகச் சிறந்த ஆளுமை அவர். என் வாழ்வின் வழிகாட்டி அவர். தனிப்பட்ட முறையில் எங்கள் குடும்பத்திற்கு  பேரிழப்பு.. 35 ஆண்டுகால உறவு.. பல்வேறு நினைவுகள் அலைமோதுகிறது. 

அவர்  உடல் வைக்கப்பட்டு இருந்த சென்னை போரூர் இராமச்சந்திரா மருத்துவமனைக்கு நானும் என் மனைவி சாந்தியும் உடனே விரைந்தோம்.  அவருக்கு இறுதி வணக்கத்தை செலுத்தினோம். 

இந்திய பொதுவுடைமை கட்சி மாநிலப் பொதுச் செயலாளர் தோழர் முத்தரசன் அவர்களும் தோழர் லெனின் அவர்களும் மருத்துவமனைக்கு வருகைதந்து இறுதி வணக்கத்தை செலுத்தினார்கள்.

உடல் நல்லடக்கம் நாளை (13. 11.2021) காலை 10 மணிக்கு தஞ்சாவூரில் நடைபெறுகிறது.