தமிழகத்தில் ஒருவருக்கு ஒமிக்ரோன் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

நைஜீரியாவில் இருந்து தோஹா வழியாக தமிழகத்திற்கு வருகை தந்த ஒருவருக்கே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த நபரிடம் தொற்று ஏற்பட்டமைக்கான எந்த அறிகுறிகளும் தென்படவில்லை எனவும், அவர் சென்னை கிண்டி கொரோனா சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் அவருடைய குடும்பத்தினருக்கு எடுக்கப்பட்ட மாதிரியிலும் மரபியல் மாற்றம் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.