தமிழகத்தில் 23 மாவட்டங்களிலுள்ள பாடசாலை மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (சனிக்கிழமை) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி சென்னை, காஞ்சிபுரம்,  திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களிலுள்ள பாடசாலை மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

அதேபோன்று தூத்துக்குடி,  திருநெல்வேலி, சேலம், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருச்சி, ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், வேலூர், மயிலாடுதுறை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் பாடசாலை மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.