தமிழகத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள 11 மருத்துவக் கல்லூரிகளைப் பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 12ஆம் திகதி திறந்து வைக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

விருதுநகர், ராமநாதபுரம், திண்டுக்கல், நாமக்கல், திருப்பூர், திருவள்ளூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் 1200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய மருத்துவக் கல்லூரிகள் கட்டப்பட்டுள்ளன.

இந்த 11 கல்லூரிகளிலும் 1500 மருத்துவப் படிப்பு இடங்களுக்கு இந்த ஆண்டு முதல் மாணவர் சேர்க்கையைத் தொடங்க மத்திய அரசு அனுமதித்துள்ளது.

இந்நிலையில் ஜனவரி 12ஆம் திகதி தமிழ்நாட்டுக்குப் பிரதமர் மோடி வரவுள்ளதாகவும் புதிய மருத்துவக் கல்லூரிகளைத் திறந்து வைக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.