ரெலோ தயாரித்த ஆவணத்தை ஏற்பதில்லை என இலங்கை தமிழரசு கட்சி தீர்மானித்துள்ள நிலையில் தமிழ் பேசும் கட்சிகள் கலந்துரையாடலின் இன்றும் இறுதி முடிவு எட்டப்படவில்லை.

5 பக்க ஆவணமொன்றை இன்று கூட்டத்தில் ரெலோ கையளித்திருந்த நிலையில் அதில் வரலாற்று தவறுகள், விடுபடல்கள் காணப்பட்டதாக சுட்டிக்காட்டப்பட்டது.

இறுதியில் ரெலோ தயாரித்த ஆவணத்தையும், இலங்கை தமிழரசு கட்சி தயாரித்த ஆவணத்தையும் கொண்டு, புதிய ஆவணமொன்றை தயாரிப்பதென முடிவாகியுள்ளது.

தற்போது புதிய வரைபை தயாரிக்கும் பணியில் சிறிகாந்தா, சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர்.

இருப்பினும் இந்த வரைபை படித்து பார்த்த பின்னர், கையெழுத்திடுவதா இல்லையா என்பதை முடிவு செய்வதாக இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

நாளை அல்லது நாளை மறுதினம் கையெழுத்து பெற்றுக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.