அரசாங்கத்தில் இருந்து விலகுவதற்கான எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் தொடர்பில் சில விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும் தொடர்ந்தும் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குருநாகலில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் ​போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.