அளுத்கம புகையிரத நிலையத்திற்கு அருகில் நேற்று (18) காலை காலியில் இருந்து கல்கிஸ்ஸை நோக்கி பயணித்த புகையிரதம் மோதியதில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தர்கா டவுன், பிரதான வீதியை சேர்ந்த 9 வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிறுவனின் சடலம் களுத்துறை நாகொட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அளுத்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.