இறக்குமதி செய்யப்படும் எரிவாயுவின் தரத்தை பரிசோதனை செய்வதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

கொட்டாவ பன்னிபிட்டிய பிரதேசத்தில் வீடொன்றில் வெடிப்புச் சம்பவம் ஒன்று நேற்று(வியாழக்கிழமை) காலை இடம்பெற்றிருந்தது.

குறித்த வெடிப்பு சம்பவம் காரணமாக வீடுசேதமடைந்ததுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் வீட்டில் இருந்த எவருக்கும் காயம் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், ஏரிவாயு கசிவு காரணமாக இந்த வெடிப்பு சம்பவம் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக கொட்டாவ பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவ இடத்தை அரச பகுப்பாய்வாளர் பார்வையிட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தநிலையில் இந்த விடயம் தொடர்பில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன இவ்வாற குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இந்த மாதத்தில் பதிவாகியுள்ள 4ஆவது வெடிப்பு சம்பவம் இது என்பது குறிப்பிடத்தக்கது.