புகையிரத நிலைய அதிபர்களின் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக, நாளாந்தம் சுமார் 10 மில்லியன் ரூபா நட்டம் ஏற்படுவதாக புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தொழிற்சங்க நடவடிக்கையால், பயணச்சீட்டு விநியோகம் மற்றும் பொதிகளைப் பொறுப்பேற்றல் என்பன இடைநிறுத்தப்பட்டுள்ளமையால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பதவி உயர்வு, பயணிகளுக்கான வசதிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்குமாறு வலியுறுத்தி புகையிரத நிலைய அதிபர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது