திருகோணமலை எண்ணெய் களஞ்சியத்தை அபிவிருத்தி செய்வதற்காக, ட்ரின்கோ பெட்ரோலியம் டெர்மினல்ஸ் லிமிட்டட் என்ற புதிய நிறுவனமொன்று நிறுவப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எரிசக்தி அமைச்சரினால் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்துக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தலுக்கமைய, இந்த புதிய நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட தரப்பினருடன் ஒரு மாதத்திற்குள் இதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் என்றும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.