திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையில் நிலவும் கடும் நெருக்கடி காரணமாக அந்த வைத்தியசாலையை வேறு இடத்தில் அமைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, வைத்தியசாலையை ´சத்தாபுர´ பிரதேசத்திற்கு எடுத்துச் செல்ல அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த வைத்தியசாலை வளாகத்தில் போதிய வசதி இல்லாமையினாலும், கடல் எல்லையில் அமைந்திருப்பதாலும் பல பிரச்சினைகள் உருவாகியுள்ளன.
இதுதொடர்பான விசேட கலந்துரையாடல் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தலைமையில் அந்த அமைச்சில் நேற்று (27) இடம்பெற்றது.
இதன்போது, நிர்மாணப் பணிகளை 3 கட்டங்களின் கீழ் விரைவில் ஆரம்பிக்குமாறு அமைச்சர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அமைச்சர் பணிப்புரை வழங்கினார்.
தற்போதைய நிலைமையில் அங்கு மேலும் கட்டிடங்களை அமைப்பதற்கு போதிய வசதி இல்லை என தெரியவந்துள்ளது. இந்த வைத்தியசாலையின் அபிவிருத்திக்காக ´ஜய்கா´ செயற்றிட்டத்தின் கீழ் 2.2 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.