சிலாபம் பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த நிலையில் பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

புதிதாக திருமணமாக தனது மனைவியை காலை பணிக்கு அழைத்து சென்ற இளம் கணவனின் மோட்டார் சைக்கிளில் திடீரென முச்சக்கர வண்டியியில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் கணவன் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில் படுகாயமடைந்த இளம் மனைவி சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிலாபம் – குருணாகல் பிரதான வீதியின் கொஸ்வத்தை, பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் 26 வயதுடைய சந்தருவன் என்ற இளைஞனும் 20 வயதுடைய, கனேஷிகா துலாஞ்சலி என்ற பெண்ணுமே விபத்திற்குள்ளாகியுள்ளனர்.

பிங்கிரிய பிரதேசத்தில் இருந்த வேகமாக வந்த முச்சக்கர வண்டியில் மோட்டார் சைக்கிளில் மோதியமையினால் இந்த விபத்து இடம்பெற்றள்ளது.

முச்சக்கர வண்டி ஓட்டிய 24 வயதுடைய இளைஞன் பிங்கிரிய பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.