திருகோணமலை கிண்ணியா நகரசபைத் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருகோணமலை – கிண்ணியா – குறிஞ்சாங்கேணி தடாகத்தில் படகு கவிழ்ந்து பாடசாலை மாணவர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கிண்ணியா நகர மேயர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிண்ணியா குறிஞ்சாக்கேணியில் நேற்று முன்தினம் மிதப்பு பாதை நீரில் மூழ்கி விபத்துக்குள்ளானதில் நான்கு சிறுவர்கள் உட்பட ஆறு பேர் உயிரிழந்ததுடன் இருபதிற்கும் மேற்பட்டோர் காயமடைந்திருந்தனர்.

சம்பவம் தொடர்பில் இதற்கு முன்னர் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.