வல்வெட்டித்துறை தீருவில் திடலை மாவீரர் நாள் நிகழ்வுகளுக்கு வழங்க வேண்டாம் என வல்வெட்டித்துறை பொலிஸார் கோரியதால், திடலில் நிகழ்வு நடத்துவதற்கு அனுமதி வழங்க முடியாது என வல்வெட்டித்துறை நகர சபை தலைவர் ச. செல்வேந்திரா தெரிவித்துள்ளார்.

வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம், மாவீரர் நாளான எதிர்வரும் 27ஆம் திகதி தீருவில் மைதானத்தில் நிகழ்வுகளை முன்னெடுக்க நகர சபையிடம் அனுமதி கோரி இருந்தார்.

அதற்கு பதில் அளிக்கும் முகமாக நகர சபை தலைவரால் , “இம்மாத இறுதி வரை தீருவில் மைதானத்தில் எந்த நிகழ்வுகளையும் நடாத்துவதற்கு அனுமதி வழங்க வேண்டாம் என வல்வெட்டித்துறை பொலிஸாரினால் தனக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளமையால், தங்கள் கோரிக்கை தொடர்பில் சாதகமாக பரிசீலிக்க முடியாது என்பதனை தெரிவித்து கொள்வதாக” எழுத்து மூலம் எம்.கே.சிவாஜிலிங்கத்திற்கு அறிவித்துள்ளார்.