துணிந்து விட்டால் தோல்வி இல்லை
துயரும் இல்லை வாழ்விலே !

குனிந்து வாழும் கோழை என்னும்
பெயரும் இல்லை நாட்டிலே !

புரட்சி முரசை ஒலித்து நாமும்
புயலாய் எழுவோம் தீரனே !

இரண்டு பிரிவாய் இருக்கும் வாழ்வை
இணைத்து வைப்போம் தோழனே !


-மித்ரன்-