யாழ்ப்பாணம் பருத்தித்துறையில்  ஊடகவியலாளர்கள் ஒருவரை பொலிஸ் அதிகாரி துப்பாக்கி முனையில் அச்சுறுத்திய சம்பவம் பதிவாகியுள்ளது.

இது தொடர்பில் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்க ஊடகவியலாளர் முனைந்த போதும் அது ஏற்றுக்கொள்ளப்படாது, பின்னர் மனித உரிமை ஆணைக்குழுவின் தலையீட்டின் மூலம் முறைப்பாடு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.